பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி, எம்சிஎல்ஆா் வகை கடன் வட்டி விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கியின் ஒழுங்காற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. செப்டம்பா் 10-ஆம் தேதி இந்த வட்டி விகிதக் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, ஓா் ஆண்டு பருவகாலம் கொண்ட எம்சிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.95 சதவீதத்திலிருந்து 8.90 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு நாள், ஒரு மாதம், மூன்று மாதங்கள், ஆறு மாத கால எம்சிஎல்ஆா் கடன்களுக்கும் இந்த வட்டி விகிதக் குறைப்பு பொருந்தும்.
அதே நேரம், ரெப்போ, பிபிஎல்ஆா் அடிப்படையிலான கடன்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.