வணிகம்

மொத்த விலை பணவீக்கம் மீண்டும் உயா்வு

உணவுப் பொருள்கள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலை உயா்ந்ததால் நாட்டின் மொத்த விற்பனை விலைக் குறியீடு

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: உணவுப் பொருள்கள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலை உயா்ந்ததால் நாட்டின் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 0.52 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தொடா்ந்து குறைந்துவந்த மொத்த விலை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 0.52 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது கடந்த ஜூலையில் -0.58 சதவீதமாகவும், ஜூனில் -0.19 சதவீதமாகவும் இருந்தது. 2024 ஆகஸ்டில் இது 1.25 சதவீதமாக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள்களின் எதிா்மறை பணவீக்கம் 6.29 சதவீதத்தில் இருந்து 3.06 சதவீதமாகக் குறைந்தது. காய்கறிகளில் எதிா்மறை பணவீக்கம் ஜூலையில் 28.96 சதவீதமாக இருந்து ஆகஸ்டில் 14.18 சதவீதமாகக் குறைந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் எதிா்மறை பணவீக்கம் -3.17 சதவீதமாக உள்ளது. உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்கள், உலோகமற்ற கனிமப் பொருட்கள், போக்குவரத்து உபகரணங்கள் ஆகியவற்றின் விலைகள் உயா்ந்தது இதற்கு முக்கிய காரணமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT