மும்பை பங்குச் சந்தை (சித்திரிப்பு)
வணிகம்

அமெரிக்கா-இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை முன்னிட்டு மீண்டெழுந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 594.95 புள்ளிகள் உயர்ந்து 82,380.69 ஆகவும் நிஃப்டி 169.90 புள்ளிகள் உயர்ந்து 25,239.10 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதை தொடர்ந்து, நம்பிக்கையின் அடிப்படையில், சென்செக்ஸ் 594.95 புள்ளிகள் உயர்ந்தது முடிவடைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸே 657.74 புள்ளிகள் உயர்ந்து 82,443.48 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 594.95 புள்ளிகள் உயர்ந்து 82,380.69 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 169.90 புள்ளிகள் உயர்ந்து 25,239.10 ஆக நிலைபெற்றது.

ஏற்றுமதியாளர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிய அதிக கட்டணங்களைத் தொடர்ந்து, பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா மற்றும் அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகளைத் இன்று தொடங்கி நடைபெற்று வருவதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே வேளையில், இந்த வாரம் நடைபெற உள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை கூட்டத்திற்கு முன்னதாக, உள்நாட்டு பங்குச் சந்தை நம்பிக்கையின் அடிப்படையில் 594.95 புள்ளிகள் உயர்ந்து முடிந்தன.

சென்செக்ஸில் கோட்டக் மஹிந்திரா வங்கி, லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி, பாரதி ஏர்டெல் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை உயர்ந்தும் அதே வேளையில் ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை சரிந்து முடிந்தன.

துறை ரீதியாக, ரியல் எஸ்டேட் பங்குகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக லாபத்தை பதிவு செய்தன. நிஃப்டி ரியாலிட்டி குறியீடு 1 சதவிகிதம் உயர்ந்தது. இதில் பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ், தி பீனிக்ஸ் மில்ஸ், டிஎல்எஃப், அனந்த் ராஜ் மற்றும் கோத்ரேஜ் பிராபர்டீஸ் உள்ளிட்ட பங்குகள் 2 சதவிகிதம் வரை உயர்ந்தன.

ஆட்டோ, மெட்டல் மற்றும் நிதி சார்ந்த பங்குகளிலும் கொள்முதல் தெண்பட்ட நிலையில் அவை 1 சதவிகிதம் வரை உயர்ந்தன. இதற்கு நேர்மாறாக எஃப்எம்சிஜி பங்குகள் அழுத்தத்தில் இருந்தன. நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு 0.3 சதவிகிதம் வரை சரிந்தது முடிந்தன.

பங்குச் சந்தையில், நிஃப்டி ஸ்மால்கேப் 100 பங்குகள் 1.91 சதவிகிதம் வரை உயர்ந்த நிலையில், நிஃப்டி மிட்கேப் 100 பங்குகள் 0.6 சதவிகிதம் வரை அதிகரித்தது.

ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் மற்றும் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட மிட்கேப் பங்குகள் 4 சதவிகிதம் வரை உயர்ந்தும், ஸ்மால்கேப் பிரிவில் ரெடிங்டன் மற்றும் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா 20 சதவிகிதம் வரை உயர்ந்தன.

வரவிருக்கும் பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவில் 25 அடிப்படை புள்ளிகள் குறைப்புக்கான எதிர்பார்ப்புகள், மீண்டும் தொடங்கப்பட்ட இந்தியா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளைச் சுற்றியுள்ள புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை அடிப்படையிலும் மற்றும் சாதகமான உலகளாவிய குறிப்புகளால் உள்நாட்டு சந்தை அதன் மீட்சிப் பயணத்தை தக்க வைத்துக் கொண்டது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்ந்த நிலையில் ஹாங்காங் ஹாங் செங் சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பாவில் சந்தைகள் சரிந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்ந்து முடிவடைந்தன.

உலகளாவிய கச்சா எண்ணெய் 0.55 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 67.07 அமெரிக்க டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.1,268.59 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

இதையும் படிக்க: டாடா மோட்டாா்ஸ் விற்பனை 73,178-ஆக உயா்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிஸ் படத்தின் இசை வெளியீடு!

எப்போதும் ராணி நான்... ஸ்ரேயா!

றெக்க றெக்க பாடல்!

வரி விதிப்பால் 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்

வேடுவன் இணையத் தொடர்!

SCROLL FOR NEXT