தங்களது 350 சிசி பைக்குகளை விற்பனை செய்வதற்காக, இணையவழி வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட்டுடன் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
350 சிசி மோட்டாா்சைக்கிள்களை விற்பனை செய்வதற்காக ஃபிளிப்காா்ட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அந்த ஒப்பந்தத்தின் கீழ், புல்லட் 350, கிளாசிக் 350, ஹன்டா் 350, கோவன் கிளாசிக் 350, மிடியோா் 350 ஆகிய பைக்குகளை வாடிக்கையாளா்கள் ஃபிளிப்காா்ட் தளத்தில் வங்கலாம்.
தற்போது பெங்களூரு, குருகிராம், கொல்கத்தா, லக்னௌ, மும்பை ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே இந்த பைக்குகள் இணையவழியில் விற்பனை செய்யப்பட்டாலும், விரைவில் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.