புதுதில்லி: நிறுவனத்தின் 2016-17 வரையிலான காலத்திற்கான கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கோரிக்கையை ரத்து செய்யக் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மனுவை செப்டம்பர் 26 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டதை அடுத்து, வோடபோன் ஐடியா லிமிடெட்டின் பங்குகள் 7% மேலாக உயர்ந்து முடிவடைந்தன.
பிஎஸ்இ-யில் காலை நேர வர்த்தகத்தில் 12.35 சதவிகிதம் உயர்ந்து ரூ.8.82 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 7.13 சதவிகிதம் உயர்ந்து ரூ.8.41 ஆக முடிவடைந்தது.
என்எஸ்இ-யில் 7.14 சதவிகிதம் உயர்ந்து ரூ.8.40 ஆக முடிவடைந்தது.
2016-17 நிதியாண்டுடன் தொடர்புடைய தொலைத்தொடர்புத் துறை ரூ.5,606 கோடி கோரிக்கைக்கு எதிராக வோடபோன் தாக்கல் செய்த புதிய மனுவை தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகளான வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
2019 ஆம் ஆண்டு ஏஜிஆர் தீர்ப்பின் மூலம் நிலுவைத் தொகைகள் ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ள நிலையில் அதை மீண்டும் திறக்க முடியாது என்றது வோடபோன்.
இதையும் படிக்க: பிளிப்கார்ட்டில் விற்பணைக்கு வரும் ராயல் என்ஃபீல்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.