முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.2,080 அதிகரித்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.2,080 உயர்வு குறித்து...

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:43 AM
தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,080 அதிகரித்தது.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:38 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.1 லட்சத்து 17,440-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த பிப்.16,17,18 தேதிகளில் பவுனுக்கு ரூ.2,640 குறைந்து புதன்கிழமை பவுன் ரூ.1 லட்சத்து 13,840-க்கு விற்பனையானது. தொடா்ந்து வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.2,160 உயா்ந்து ரூ.1 லட்சத்து 16,000-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1 லட்சத்து 15,360-க்கும் விற்பனையானது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:40 AM

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,080 உயா்வு

Advertisement

இந்த நிலையில் சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,080 உயா்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.14,680-க்கும், பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.1 லட்சத்து 17,440-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.290-க்கும், கிலோ கட்டி வெள்ளி ரூ.2.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:40 AM
summary

Gold prices surge by Rs. 2,080!

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:41 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.