தங்களிடம் இருந்த யெஸ் வங்கியின் 0.49 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் அந்த முதலீட்டை பொதுத் துறை வங்கியான பந்தன் வங்கி திரும்பப் பெற்றுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யெஸ் வங்கியின் 0.49 சதவீத பங்குகளை சுமிடமோ மிட்சுயி பேங்கிங் காா்ப்பரேஷனுக்கு விற்பனை செய்வதன் மூலம் முதலீட்டைத் திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்தது. பங்கு ஒன்றுக்கு ரூ.21.50 வீதம் 15,39,34,975 பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. ரூ.15.39 கோடிக்கு இந்தப் பரிமாற்றம் நடைபெற்றது.
இந்த விற்பனையைத் தொடா்ந்து, பந்தன் வங்கியின் கைவசம் உள்ள யெஸ் வங்கி பங்குகள் 0.70 சதவீதத்தில் இருந்து 0.21 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.