ஒரே நாளில் ரூ.1,680 விலையுயர்ந்த தங்கம்: மக்கள் அதிர்ச்சி!
ஆபரணத் தங்கம் இன்றும் இருமுறை விலையுயர்ந்துள்ளது.
வணிகம்ஒரே நாளில் ரூ.1,680 விலையுயர்ந்த தங்கம்: மக்கள் அதிர்ச்சி!
ஆபரணத் தங்கம் இன்றும் இருமுறை விலையுயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கம் விலை நேற்று போல் இன்றும் ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த இரு நாள்களாக வர்த்தகம் தொடங்கி காலை, மாலை என இரண்டு முறையும் தங்கம் விலையுயர்ந்து வருகின்றது.
சென்னையில் கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 2,800 விலையுயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம் இன்று காலை ரூ. 560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.1,120 உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.1,680 விலை உயர்ந்துள்ளது.
அதேபோன்று தங்கம் ஒரு கிராம் இன்று காலை ரூ. 70 உயர்ந்த நிலையில், வர்த்தகம் நிறைவுபெறும்போது மேலும் கிராமுக்கு ரூ. 140 உயர்ந்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 10.640-க்கும், சவரனுக்கு ரூ. 85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியும் ரூ. 1 உயர்ந்து கிராம் ரூ. 150-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,50,000 ஆகவும் விற்கப்படுகிறது.
உலக நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருகின்றது.
இனிவரும் காலங்களில் தங்கம் விலை மேலும் உயரும் என நகைமதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றன.
The price of gold jewelry has risen twice in a single day, just like yesterday, causing shock among the public.
இதையும் படிக்க: செப்.25 முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!