ஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டவியா ஆர்எஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஆக்டவியா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், பிஎஸ்6 பேஸ் 2 விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதால் 2023ஆம் ஆண்டில் ஆக்டவியாவை நிறுத்தியது. இருப்பினும் இந்த பிராண்ட் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் செடானின் செயல்திறன் பதிப்பான ஆக்டவியா ஆர்எஸ்-ஐ காட்சிப்படுத்தியது.
செக் நாட்டைச் சேர்ந்த வாகன உற்பத்தியாளர் ஸ்கோடா ஆக்டவியா ஆர்எஸ் 2025 நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
ஸ்கோடா விரைவில் இந்தியாவில் ஆக்டவியா ஆர்எஸ்-யின் 4வது தலைமுறை மாடல்களை வெளியிடும். இதில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் எஞ்சனைப் பயன்படுத்துகிறது.
இது அதிகபட்சமாக 265 எச்.பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக மணிக்கு 250 கி. மீட்டர் வேகம் வரை செல்லும். இந்த காரானது 6.4 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். மணிக்கு 250 கி.மீ வேகத்தை எட்டும்.
தோற்றத்தைப் பொருத்தவரை கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், புதிய வடிவமைப்புடன் கூடிய சக்கரங்கள், புரொஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடிடி, ஆர்எல்கள் இடம்பெறும். இருக்கை, டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் சிவப்பு நிற கோடுடன் கூடிய இன்டீரியர் உள்பட பல அம்சங்கள் இடம் பெறும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்கோடா ஆக்டவியா ஆர்எஸ், பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்படுவதால் ஆரம்ப ஷோரூம் விலை ரூ. 53 லட்சத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்: ஒடிசா அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.