மேபேக் ஜி.எல்.எஸ். 
வணிகம்

பென்ஸ் பிரியர்களுக்கு.. மேபேக் ஜி.எல்.எஸ். கார் அறிமுகம்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேபேக் ஜி.எல்.எஸ். கார் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேபேக் ஜி.எல்.எஸ். காரை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவை அடுத்து மேபேக் ஜிஎல்எஸ்-ஐ உற்பத்தி செய்யும் ஒரே சந்தையாக இந்தியா உள்ளது. மெர்சிடிஸ்-மேபேக் சந்தைகளில் முதல் 5 இடங்களுக்குள் இந்திய நுழைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் உற்பத்தி செய்வதால் மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ் காரை பரவலாகக் கிடைக்கச் செய்யவும், விநியோக நேரத்தைக் குறைக்கவும் உதவும் என்று ஜெர்மன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன?

ஜிஎல்எஸ் மாடலில் 4 லிட்டர் டிவின் டர்போ மைல்டு ஹைபிரிட் வி8 என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 557 எச்.பி. பவரையும், மைல்டு ஹைபிரிட்டான இதில் 22 எச்.பி.யை வெளிப்படுத்தும் 48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இது மொத்தமாக 770 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

4 வீல் டிரைவான இதில் 9 ஸ்பீடு டார்க்யூ கன்வர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. 4.9 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும். அதிகபட்சமாக 250 கி.மீ. வேகம் வரை செல்லும். இதில் 23 அங்குல அலாய் வீல்கள், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி, டிஆர்எல்.கள், 12.3 இன்ச் ஸ்கிரீன், பின்புறம் அமருபவர்களுக்கும் சேர்த்து இரண்டு 11.6 அங்குல டிஸ்பிளேகள், டூயல் வயர்லெஸ் போன் சார்ஜர்கள், பனோரமிக் சன்ரூப், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், 29 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், 9.6 லிட்டர் ரெப்ரிஜிரேட்டர் கம்பார்ட்மெண்ட் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மேபேக் ஷோரூம் விலை - ரூ. 2.75 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதன் விலை ரூ. 3.17 கோடி இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், இறக்குமதி செய்வதை விட ரூ. 42 லட்சம் குறைவு என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

Mercedes-Benz has launched the made-in-India Maybach GLS at Rs 2.75 crore, marking a significant price drop compared to the fully imported model’s price tag of Rs 3.17 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-ம் நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆனால் ஐடி, ஆட்டோ, பார்மா பங்குகள் சரிவு!

நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

சாம்பியன்ஸ் லீக்கில் 100% வெற்றியுடன் வரலாறு படைத்த ஆர்செனல்!

யு19 உலகக் கோப்பை: ஜோரிச் வான் சதம் விளாசல்; இலங்கைக்கு 262 ரன்கள் இலக்கு!

தனுஷின் 55 ஆவது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

SCROLL FOR NEXT