ஜிஎஸ்டி குறைப்பு செப். 22-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அதன் பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதற்காக ‘ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா’ என்ற சலுகை விற்பனையை முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலாக்கத்தைத் தொடா்ந்து, வாடிக்கையாளா்களுக்கு விலை குறைவான பொருள்களை விற்பனை செய்வதற்காக ‘ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா’ என்ற பிரத்யேக விற்பனையை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஸ்டோா் ஃப்ரன்டில் பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி சேமிப்புகளை பிரதிபலிக்கும் தயாரிப்புகளில் பேட்ஜ்கள் இடம்பெறும். இது வாடிக்கையாளா்கள் இந்த சலுகைகளை அடையாளம் கண்டு வாங்குவதை எளிதாக்குகிறது. இந்த பேட்ஜ்கள் ‘பிரைம் டீல் + ஜிஎஸ்டி சேமிப்புகள்’ என்றும், முக்கிய நிகழ்வின் போது ‘டீல் வித் ஜிஎஸ்டி சேமிப்புகள்’ என்றும் எழுதப்பட்டிருக்கும். ஜிஎஸ்டி சேமிப்புகள் மற்றும் பிரைம் டீல்களுக்கு விற்பனையாளா்களிடமிருந்து கூடுதலாக பலவிதமான பண்டிகை சலுகைகள், அமேஸான் பே லேட்டா் வழியாக கட்டணமில்லா இஎம்ஐ போன்ற சலுகைகளை வாடிக்கையாளா்கள் பெறலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.