பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் நிலையில், ஃபிளிப்கார்டு நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.
இ-வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட், பழைய பொருள்களைக் கொடுத்து புதிய பொருள்களுக்கு விலைச் சலுகை பெறும் திட்டத்தில் 26 பொருள்களை பட்டியலிட்டுள்ளது.
அந்த பட்டியலில், செல்போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்களும் அடங்கும். விலை அதிகம் கொண்ட பொருள்களையும் மக்கள் குறைந்த விலையில் வாங்கும் வகையில், இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரங்களில் வாழ்வோரும், விலை அதிகமான பொருள்களை சலுகை விலையில் வாங்க இது வழி வகுக்கும்.
மேலும், விலை அதிகம் உள்ள பொருள்களையும் தங்களது பட்ஜெட் விலையில், ஃபிளிப்கார்ட் மூலம் வாங்குவதற்கு வகை செய்ய இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
வாடிக்கையாளர்கள், தங்களிடமிருக்கும் பழைய பொருள்களைக் கொடுத்துவிட்டு, சலுகையுடன் புதிய பொருள்களை வாங்கலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் பழைய பொருள்களை செய்யறிவு மூலம் மதிப்பிடும் முறையை ஃபிளிப்கார்டு கொண்டு வந்திருக்கிறது.
ஒரு சில வினாடிகளில், பழைய பொருள்களின் நிலையை செய்யறிவு மதிப்பிட்டு அதற்கான மதிப்பையும் கொடுத்துவிடும். இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பதையும் ஃபிளிப்கார்ட் உறுதி செய்கிறது.
பல வீடுகளில் பயன்படுத்த இயலாமல், ஏராளமான மின்னணு சாதனங்கள் குப்பை போல போடப்பட்டு வைத்திருக்கப்படும். ஆனால், இந்த சலுகை மூலம், அவை பணமாக மாற்றும் வாய்ப்புக் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? நீதிமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.