ஜிஎஸ்டி குறைப்புடன் தொடங்கிய நவராத்திரியில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகியின் சில்லறை விற்பனை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து மாருதி சுஸுகி இந்தியாவின் முதுநிலை செயல் அதிகாரி (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) பார்த்தோ பானர்ஜி கூறியதாவது:
கார்களை வாங்குவதற்காக பொதுவாக நாளொன்றுக்கு 40,000 முதல் 45,000 வரை விசாரணைகள் வரும் நிலையில், ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு நாளொன்றுக்கு 80,000 விசாரணைகளும், 18,000 முன்பதிவுகளும் நடைபெறுகின்றன. நவராத்திரி தொடங்கியதிலிருந்து இதுவரை 75,000 வாகனங்களுக்கும் மேல் விற்பனையாகியுள்ளன.
சிறிய கார்கள் பிரிவில் பெரும் ஆர்வம் காணப்படுகிறது. ஆரம்பநிலை கார்கள் பிரிவில் முன்பதிவு 50 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.