வணிகம்

ஈவுத்தொகையாக ரூ.3,248 கோடி அரசுக்கு செலுத்திய என்டிபிசி!

அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனமானது 2024-25 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையான ரூ.3,248 கோடியை அதன் நிர்வாக மின் அமைச்சகத்திற்கு வழங்தியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனமானது 2024-25 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையான ரூ.3,248 கோடியை அரசுக்கு வழங்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த தொகையை அமைச்சர் மனோகர் லாலுக்கு என்டிபிசி தலைவரும், நிர்வாக இயக்குநருமா குர்தீப் சிங் மற்றும் மற்றும் இயக்குநர்கள் குழு ஒன்றுகூடி நிதியாண்டின் இறுதி ஈவுத்தொகை வழங்கியதாக தெரிவித்தனர்.

நவம்பர் 2024 மற்றும் பிப்ரவரி 2025ல் முறையே வழங்கப்பட்ட முதல் இடைக்கால ஈவுத்தொகையான ரூ.2,424 கோடி மற்றும் இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகை ரூ.2,424 கோடியும் வழங்கி உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

2024-25 நிதியாண்டில் நிறுவனம் அரசுக்கு வழங்கிய மொத்த ஈவுத்தொகை ரூ.8,096 கோடி என்றும், தொடர்ந்து 32வது ஆண்டாக ஈவுத்தொகையை செலுத்தி வருகிறதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: நவராத்திரி தொடங்கிய பிறகு 75 ஆயிரத்தைக் கடந்த மாருதி விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் Q2 லாபம் 86% உயர்வு!

குளோப் ட்ரோட்டர் ப்ரோமோ பாடல் வெளியானது!

தில்லி கார் வெடிப்பு: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் Q2 நிகர லாபம் ரூ.230 கோடி!

பூடானில் நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT