மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைந்து 7 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆக முடிவடைந்தது.
உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அமெரிக்க விசா கட்டண உயர்வின் தாக்கம் இந்தியாவின் ஐடி சேவைகள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்ததால், ரூபாய் மதிப்பு அதன் அனைத்து நேரக் குறைந்த நிலைக்கு சென்றதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அக்டோபர் 1 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி தனது கொள்கைக் கூட்டத்தின் முடிவுகள் அறிவிக்க உள்ளதையடுத்து, இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் அரசு பத்திரங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.69 ஆக தொடங்கி, முடிவில் 7 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆகவும் உள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ரூபாய் மதிப்பு அதன் குறைந்த அளவிலிருந்து மீண்டு அமெரிக்க டாலருக்கு நிகராக 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சரிந்து நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.