கோல் இந்தியாவின் உற்பத்தி 76.81 கோடி டன்னாக சரிவு!
கோல் இந்தியா நிறுவனம் 2026 நிதியாண்டில் தனது நிலக்கரி உற்பத்தி 1.7 சதவீதம் குறைந்து, 76.81 கோடி டன்னாக இருப்பதாக இன்று தெரிவித்தது.
புதுதில்லி: கோல் இந்தியா நிறுவனம், 2026 நிதியாண்டில் தனது நிலக்கரி உற்பத்தி 1.7 சதவீதம் சரிந்து, 76.81 கோடி டன்னாக இருப்பதாக இன்று தெரிவித்தது.
நாட்டின் மொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள இந்நிறுவனம், 2025 நிதியாண்டில் 78.11 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்திருந்தது.
நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், மார்ச் மாதத்திற்கான நிலக்கரி உற்பத்தி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 8.58 கோடி டன்னாக சரிந்து 8.45 கோடி டன்னாக குறைந்துள்ளது.
நிறுவனத்தின் நிலக்கரி விநியோகம் 2025 நிதியாண்டில் 76.3 கோடி டன்னாக இருந்த நிலையில், 2026 நிதியாண்டில் இது 2.4 சதவீதம் குறைந்து 74.48 கோடி டன்னாகச் சரிந்தது.
கோல் இந்தியா, நாட்டின் மின் உற்பத்தித் துறைக்கு தேவையான எரிபொருளை விநியோகித்து வருகின்ற நிலையிலும், மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியின் பெரும்பகுதியை இந்நிறுவனமே வழங்குகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு மத்தியிலும், இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரி இன்றும் 70 சதவீதப் பங்கைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.