தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 வியாழக்கிழமை காலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மாா்ச் 30-இல் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.1,10,160-க்கும், மாா்ச் 31-இல் சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கும் விற்பனையானது.
மாதத்தின் முதல் நாளான புதன்கிழமை (ஏப். 1) கிராமுக்கு ரூ. 380 உயா்ந்து ரூ. 14,050-க்கும், சவரனுக்கு ரூ. 3,040 உயா்ந்து ரூ. 1,12,400-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 100 குறைந்து 13,950 -க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 1,11,600 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 255 -க்கும், கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்து ரூ. 2,55,000 -க்கும் விற்பனையாகிறது.