முகப்பு
வணிகம்

ரூ. 49,999-க்கு விற்பனையாகும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்!

டிவிஎஸ் நிறுவனத்தின் ஆர்பிட்டர் மின்சார இருசக்கர வாகனம் குறித்து...

Updated On : 7 ஏப்ரல் 2026, 6:10 pm IST
ஆர்பிட்டர் வி 1 - படம் / நன்றி - டிவிஎஸ்
பகிர்:

டிவிஎஸ் நிறுவனத்தின் ஆர்பிட்டர் வி 1 மின்சார இருசக்கர வாகனத்தின் ஆரம்ப விலை ரூ. 49,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துவரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனத்தின் ஆர்பிட்டர் வி 1 மற்றும் ஆர்பிட்டர் வி 2 மாடல் விலை குறித்து காணலாம்.

மின்சார இருசக்கர வாகன விற்பனையின் ஆரம்பகட்டத்தில் ஆர்பிட்டர் மாடல் இடம்பெற்றுள்ளது. விலை மற்றும் தரத்தில் அடுத்தடுத்த கட்டங்களில் இருசக்கர வாகனங்கள் இருந்தாலும், பட்ஜெட் விலையிலான மின்சார ஸ்கூட்டராக ஆர்பிட்டர் மாடல் அறியப்படுகிறது.

Advertisement

Advertisement

ஆர்பிட்டர் வி 1 - ஆர்பிட்டர் வி 2 வித்தியாசம் என்ன?

ஆர்பிட்டர் வி 1 மற்றும் ஆர்பிட்டர் வி 2க்கும் இடையே பேட்டரியில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. ஆர்பிட்டர் வி 1 மாடலில் 2.8kWh பேட்டரி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், இதன்மூலம் 86 கி.மீ. வரை பயணிக்க முடியும். 80% சார்ஜ் செய்வதற்கு 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மணிக்கு 68 கி.மீ. தூரம் வரை செல்ல முடியும்.

இது மட்டுமே இரண்டு வகை ஆர்பிட்டர்களுக்கும் உள்ள வித்தியாசமாகும். மற்ற அம்சங்கள் இருவகையிலும் இடம்பெற்றுள்ளன. பின்பக்கத்தில் 14 அங்குல டயரும் முன்பக்கத்தில் 12 அங்குல டயரும் உள்ளது. வண்ணத் திரை, நிலையான வேகத்தை குறித்துவைத்துக்கொண்டு அதன்படி இயங்கும் வகையிலான மின்னணு சாதனம் உள்ளது. இதனால் வாகன ஓட்டி அச்சமின்றி பயணிக்கலாம். ஹில் டாப் எனப்படும் பின்பக்கம் செல்லும் விசையை கட்டுப்படுத்தலாம்.

ஆர்பிட்டர் வி 1 மாடல் ஆரம்ப விலை ரூ. 49,999. ஒருசில கூடுதல் அம்சங்களுடன் அதிகபட்சமாக ரூ. 84,500 வரை விற்கப்படுகிறது.

ஆர்பிட்டர் வி 2 மாடலில் 3.1kWh திறனுடைய பேட்டரி உள்ளது. இதன்மூலம் 158 கி.மீ. வரை செல்ல முடியும். பெரிய அளவிலான பேட்டரி என்பதால், முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் 10 நிமிடங்கள் வரை நேரம் எடுக்கும். இதன் விலை ரூ. 99,900.

summary

TVS Orbiter V1 Orbiter V2 price and variants explained

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.