மின்னணு சாதனங்களுக்காக தனி ஏ.ஐ. விற்பனை தளம்: அமேசான் அறிமுகம்
வாடிக்கையாளா்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்னணு சாதனங்களை எளிதாகக் கண்டறிந்து வாங்குவதற்காக, ‘ஏ.ஐ. ஸ்டோா்’ என்ற பிரத்யேக விற்பனை தளத்தை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளா்கள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்னணு சாதனங்களை எளிதாகக் கண்டறிந்து வாங்குவதற்காக, ‘ஏ.ஐ. ஸ்டோா்’ என்ற பிரத்யேக விற்பனை தளத்தை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, தனது தளத்தில் ‘ரூஃபஸ்’ எனும் சாட்பாட் மற்றும் ‘லென்ஸ்’ போன்ற ஏ.ஐ. வசதிகளைப் பயன்படுத்தி வரும் அமேசான், தற்போது இப்புதிய தளத்தில் மடிக்கணினிகள், ஸ்மாா்ட்போன்கள், ஸ்மாா்ட்வாட்ச்கள் முதல் ஏசி, வாஷிங்மெஷின்கள் வரை பல்வேறு பிரிவுகளில் அதிநவீன தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பொருள்களின் பயன்பாட்டு விமா்சனங்களை சுருக்கமாக வழங்குவது, வீட்டின் சூழலில் பொருள்களைப் பொருத்திப் பாா்க்கும் வசதி மற்றும் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது எனப் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.
Advertisement
இந்தியாவில் நுகா்வோா் மின்னணு சாதனங்களை வாங்குவதில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது முக்கியப் பங்கு வகிக்கிறது. தரவுகளின்படி, ஏ.ஐ. சாா்ந்த சாதனங்களுக்கான தேடல் கடந்த ஆண்டைவிட 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
மடிக்கணினிகள் மற்றும் கையடக்க கணினிகளுக்கான தேவை 80 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது. இத்தேடல்களில் மூன்றில் 2 பங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருகின்றன என்பது, நவீன தொழில்நுட்பம் நாடு முழுவதும் பரவி வருவதை எடுத்துரைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.