தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!
தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ. 14,420-க்கும், அதேசமயம் சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,15,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 அதிகரித்து கிராம் ரூ. 285-க்கும் கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்து கிலோ ரூ.2,85,000-க்கும் விற்பனையாகிறது.
சமீபத்திய காலமாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கமாகவே அதிகரித்தும் குறைந்து வருகிறது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில் மீண்டும் மாலையில் ரூ.1,040 உயர்ந்தது.
இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தம், வரி குறைப்பு உள்ளிட்ட நடிவடிக்கைகளால் தங்கத்தில் விலை குறையும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்றத் தன்மையால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்வது விலையை நிலைத்தன்மையுடன் வைத்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.