முகப்பு
வணிகம்

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஒப்புதல்!

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:00 PM
கோதுமை (கோப்புப்படம்)
பகிர்:

புதுதில்லி: 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

உள்நாட்டு சந்தையை நிலைப்படுத்தவும், விவசாயிகளுக்கு லாபகரமான வருமானத்தை உறுதி செய்யவும், 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது. இது விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு நதியாண்டின், தனியார் நிறுவனங்களிடம் கோதுமை இருப்பு 75 லட்சம் டன்னாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இதே காலத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட 32 லட்சம் டன் அதிகமாகும்.

ஏப்ரல் 1, 2026 நிலவரப்படி, இந்திய உணவுக் கழகத்திடம், மத்திய தொகுப்பில் மொத்த கோதுமை இருப்பு சுமார் 182 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோதுமை ஏற்றுமதியால், உள்நாட்டு உணவுப் பாதுகாப்புத் தேவை பாதிக்காது என்பதை அமைச்சகம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

summary

The government on Friday allowed export of 25 lakh tonnes of wheat, to stabilise domestic markets and ensure remunerative returns to farmers amid a comfortable stock position.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.