முகப்பு
வணிகம்

இருசக்கர வாகன பிரிவில் வளர்ச்சியை அதிகரிக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்!

ஸ்கூட்டர்கள், பிரீமியம் பைக்குகள் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் தனது இருப்பை வலுப்படுத்த ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்.

Updated On : 15 பிப்ரவரி 2026, 8:08 pm IST
பகிர்:

புதுதில்லி: ஸ்கூட்டர்கள், பிரீமியம் பைக்குகள் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் தனது இருப்பை வலுப்படுத்த ஹீரோ மோட்டோகார்ப் இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹர்ஷ்வர்தன் இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் சர்வதேச சந்தைகளிலும், பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் வணிகத்திலும் தனது இருப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் காலாண்டில், நிறுவனம் ரூ.12,487 கோடி வருவாயையும், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.1,275 கோடியையும் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டின் 3வது காலாண்டில், 14.64 லட்சமாக இருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை 16% வளர்ச்சியை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 16.97 லட்சமாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான விவேக் ஆனந்த், அடுத்த சில ஆண்டுகளில், இரு சக்கர வாகனத் துறையில் நிறுவனம் அதன் வளர்ச்சியை நிறைவேற்றுவதிலும், விரைவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்றார்.

summary

Hero MotoCorp aims to strengthen its presence in segments such as scooters, premium bikes, and electric vehicles, where it currently remains under-represented.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.