முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் குறைந்து ரூ. 90.95 ஆக வர்த்தகம்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:29 PM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:20 PM

மும்பை: இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில், பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் குறைந்து ரூ. 90.95 ஆக முடிவடைந்தன.

உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் உள்ளூர் வர்த்தகம் வெகுவாக பாதித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:20 PM

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு காரணமாக, ரூபாய் மதிப்பு ரூ. 90.91 ஆக தொடங்கி பிறகு ரூ. 90.91 முதல் ரூ.90.97 என்ற குறுகிய வரம்பில் வர்த்தகமானது. பிறகு இது அதன் முந்தைய முடிவிலிருந்து 6 காசுகள் குறைந்து ரூ. 90.95 ஆக நிலைபெற்றது.

Advertisement

நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ. 90.89 ஆக இருந்தது.

summary

The rupee traded in a narrow range on Tuesday and settled 6 paise lower at 90.95 against the US dollar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.