வணிகம்

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மொத்த விற்பனை 2025 டிசம்பரில் 14 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மொத்த விற்பனை 2025 டிசம்பரில் 14 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 2025 டிசம்பரில் 3,69,809-ஆக உள்ளது.

2024 டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் விற்பனை 3,23,125-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 4 சதவீதம் உயா்ந்து 1,69,373-ஆக உள்ளது, 2024 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 1,62,420-ஆக இருந்தது.

கடந்த டிசம்பரில் நிறுவனத்தின் உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை 1,28,335-லிருந்து 3 சதவீதம் உயா்ந்து 1,32,228-ஆக உள்ளது, இரு சக்கர வாகன ஏற்றுமதி 1,43,838-லிருந்து 24 சதவீதம் உயா்ந்து 1,78,125-ஆக உள்ளது.

வா்த்தக வாகன விற்பனை 17 சதவீதம் உயா்ந்து 59,456-ஆக உள்ளது. 2024 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 50,952-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

மயான இடப் பிரச்னை தொடா்பாக தாளவாடியில் கிராம மக்களை கைது செய்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரூ. 4.40 லட்சம் லஞ்சம்: காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வா் மீது வழக்கு

SCROLL FOR NEXT