பங்குச் சந்தைகள் நேற்று சரிவுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று(ஜன. 2) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,259.36 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 431.24 புள்ளிகள் அதிகரித்து 85,619.84 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 139.35 புள்ளிகள் உயர்ந்து 26,285.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி மாருதி சுசுகி, எம்&எம், ஏசியன் பெயிண்ட்ஸ், பிஇஎல், ஆர்ஐஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி, என்டிபிசி, டாடா ஸ்டீல் ஆகியவை 1.3 சதவீதம் வரை உயர்ந்து, அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.
அதேநேரத்தில் ஐடிசி 4 சதவீதம் சரிவடைந்த மோசமான இழப்பைச் சந்தித்து வருகிறது. டைட்டன், எச்சிஎல்டெக், ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா ஆகியவை இழப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நிஃப்டி மிட்கேப் 150, மிட்கேப் 250 குறியீடுகள் முறையே 0.54 சதவீதம், 0.38 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.
துறைவாரியாக, நிஃப்டி ஆட்டோ, ரியல் எஸ்டேட் லாபமடைந்து வரும் நிஃப்டி எஃப்எம்சிஜி, ஐடி குறியீடுகள் சரிந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.