புதுதில்லி: டொரண்ட் கேஸ் நிறுவனம் இன்று முதல் நாடு முழுவதும் தேசிய எரிவாயு கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட தனது செயல்பாட்டுப் பகுதிகளில், சிஎன்ஜி சில்லறை விலையில் ஒரு கிலோவுக்கு ரூ.3.50 வரையிலும், வீட்டு உபயோக பிஎன்ஜி விலை ஒரு கன மீட்டருர் அளவுக்கு ரூ.2 வரையிலும் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பால், சிஎன்ஜி விலை பெட்ரோலை விட 43% வரை மலிவாக இருக்கும் என்று டொரண்ட் கேஸ் தெரிவித்துள்ளது.
சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலை குறைப்பு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் பிஎன்ஜிஆர்பி-யின் ஒருங்கிணைந்த கட்டண உத்தரவு செயல்படுத்தியதன் விளைவாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொரண்ட் கேஸ் நிறுவனம் தற்போது 526 சிஎன்ஜி நிலையங்களை இயக்கி வருகிறது. மேலும் செயல்படும் 34 மாவட்டங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் வழி எரிவாயு இணைப்புகளை வழங்கியும் வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.