தங்கம் விலை நிலவரம்: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது.
அதேபோல், வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து வர்த்தகமாகி வருகின்றது.
கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஒரு லட்சத்தைத் தாண்டி தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது.
நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ. 12,000-ம் அதிகரித்த நிலையில், மாலை நேரத்தில் தங்கம் ரூ.560-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ. 6,000-ம் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ. ரூ. 1,02,400, வெள்ளி கிராம் ரூ. 277-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 12,750-க்கும், ஒரு சவரன் ரூ. 1,02,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலையும் இன்று காலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 272-க்கும், கிலோவுக்கு ரூ. 2,72,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.