நியூ ஜென் 2026 ரெனால்ட் டஸ்டர் - ஜன. 26இல் அறிமுகம் :
ரெனால்ட் நிறுவனத்தின் தயாரிப்பான டஸ்டர் ரக கார்கள் இந்திய சந்தையில் நீண்ட நெடும் இடைவெளிக்குப்பின் ஜன. 26-ஆம் தேதி முதல் மீண்டும் அறிமுகமாகி இம்மாதத்திலிருந்தே விற்பனைக்கு வரவுள்ளன.
இந்தியாவில் முதல் தலைமுறை டஸ்டர் மிகப் பிரபலம். விற்பனை பட்டையை கிளப்பியது. ஆனால் அதன் தொடர்சியாக இரண்டாம் தலைமுறை டஸ்டர் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இந்த நிலையில், நெடும் இடைவெளிக்குப்பின் மூன்றாம் தலைமுறை டஸ்டர் 2026-ஆம் ஆண்டின் குடியரசு நாளில் அறிமுகமாகிறது.
முக்கியமாக, மத்திய-ரக(மிட் சைஸ்) எஸ்யூவி பிரிவைக் குறிவைத்தே டஸ்டர் மாடலை மீண்டும் சந்தைக்கு கொண்டு வருகிறது ரெனால்ட்.
நியூ ஜென் 2026 ரெனால்ட் டஸ்டர் ரக கார்களில் என்னென்ன சிறப்பம்சங்களை எதிர்பார்க்கலாம்?
ஹுண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா
கியா நிறுவனத்தின் செல்டாஸ்
மாருதி சுஸூகி நிறுவனத்தின் விக்டோரிஸ்
டொயோடா நிருவனத்தின் அர்பன் க்ரூசெர் ஹைரைடர்
ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் ஆகிய கார்கள் வழங்கும் சந்தைப் போட்டியை சமாளித்து இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அளவுக்கான அம்சங்களுடன் டஸ்டர் களமிறக்கப்படுகிறதாம்.
சிஎம்எஃப்-பி வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டஸ்டர் பழைய டஸ்டர் மாடலைவிட 9 மி.மீ. அகலமாகவும், 2 மி.மீ. நீளமாகவும் உள்ளதாம். நியூ டேசியா டஸ்டர் மாடலை ஒத்தே இதன் வடிவமைப்பும் உள்ளதாம்.
1.2 லிட்டர் மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல், 1.6 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மில் ஆகிய மூன்று என்ஜின்களில் இந்திய சந்தைக்கு எவ்வகை என்ஜின் மாடல் விற்பனைக்கு வர உள்ளது என்று உறுதிபடத் தெரியவில்லை.
ஓட்டுநர் உதவி அமைப்பான ஏடிஏஎஸ் உள்ளதாம்
தானியங்கி பிரேக்கிங் அமைப்பு
போக்குவரத்து சிக்னல் குறியீட்டை கணித்து செயல்படும் முறை
ஒரு தளத்திலிருந்து அடுத்த தளத்துக்குச் செல்லும் முன் லேன் எச்சரிக்கை அமைப்பு
பின் பக்க பார்க்கிங் அமைப்பு
அவசர நிறுத்தம் அமைப்பு ஆகிய பல அம்சங்களை உள்ளடக்கி நியூ ஜென் ரெனால்ட் டஸ்டர் 2026 வர உள்ளது என்று ரெனால்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.