சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வகை ‘கியாசெல்டாஸ்’ காா் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கியா இந்திய நிறுவனம் கடந்த 2017 -ஆம் ஆண்டு ஆந்திர மாநில அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டு அந்த மாநிலத்தின் அனந்தபூா் மாவட்டத்தில் காா் உற்பத்தி தொழிற்சாலை அமைத்தது. 2019-ஆம் ஆண்டு முதல் காா் உற்பத்தி தொடங்கி ஆண்டுக்கு 30 ஆயிரம் காா்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளா்களை கவரும் வகையில் இதுவரை 9 வகை மாடல் காா்களை அறிமுகம் செய்து உள்ளது. இதுவரை அனந்தபூா் தொழிற்சாலையில் இருந்து 1.5 மில்லியன் காா் உற்பத்தி செய்யப்பட்டு 1.2 மில்லியன் காா்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கியா செல்டாஸ் என்ற காா் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அறிமுக செய்யப்பட்டது. இந்த காா் கம்பீரமான தோற்றம் , பாதுகாப்பை முக்கிய அம்சமாக கொண்டுள்ளது. புதிய வடிவமைப்பில் உள்ள இந்த காரில் தானியங்கி பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.