மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் 21-ஆவது ஆண்டு தொழில்நுட்ப மாநாடு, கண்காட்சி, விருது வழங்கும் விழாவில் 3-ஆவது ஆண்டாக தொடர்ந்து 6 பிரிவுகளில் வென்ற சிட்டி யூனியன் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி என்.காமகோடியிடம் விருதுகளை வழங்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி.ரபி சங்கர்.  
வணிகம்

6 விருதுகளை வென்ற சிட்டி யூனியன் வங்கி!

ஐபிஏ தொழில்நுட்ப மாநாட்டில் ஆறு விருதுகளைப் பெற்ற சிட்டி யூனியன் வங்கி.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: மும்பையில் நடைபெற்ற ஐபிஏ தொழில்நுட்ப மாநாட்டில் சிட்டி யூனியன் வங்கி ஆறு விருதுகளை வென்றுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிட்டி யூனியன் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (Indian Banks’ Association – IBA) வழங்கும் ஐபிஏ தொழில்நுட்ப மாநாட்டில் 6 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது.

இந்த விருதுகள், 9 ஜனவரி 2026 அன்று மும்பையில் நடைபெற்ற 21வது ஆண்டு தொழில்நுட்ப மாநாடு, கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா(2024–25) இல் வழங்கப்பட்டது.

சிறந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல்ML பயன்பாடு(Best AI&ML adoption), சிறந்த தொழில்நுட்ப வங்கி (Best Technology Bank), சிறந்த டிஜிட்டல் நிதி உள்ளடக்கம் (Best Digital Financial Inclusion), சிறந்த டிஜிட்டல் விற்பனை (Best Digital Sales), சிறந்த தகவல் தொழில்நுட்ப இடர் மேலாண்மை (Best IT Risk management) ஆகிய பிரிவுகளில் முதலிடத்துக்கான விருதுகளையும், Best Fintech & DPI Adoption என்ற பிரிவில் இரண்டாம் இடத்துக்கான விருதையும் சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது.

இந்த விருதுகளை, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநர் டி. ரபி சங்கர் வழங்கினார்.

IBA தொழில்நுட்ப விருதுகள் பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கட்டண மற்றும் சிறு நிதி வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளையும் அங்கீகரித்து. வங்கித் துறையில் புதுமையான சிந்தனைகள், தொழில்நுட்ப முயற்சிகள், மேலாண்மைத் திறன் மற்றும் திறம்பட செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் போட்டித் திறனை மேம்படுத்திய வங்கிகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள் வங்கித் துறையில் மிகுந்த மதிப்பும், உயர்வும் கொண்டதாக கருதப்படுகின்றன. கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப மற்றும் வணிக முன்னேற்றங்களை அடைந்த வங்கிகளை கௌரவிப்பதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.

IBA Technology Awards இல், மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து, சிட்டி யூனியன் வங்கி  6 -க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

City Union Bank has won six awards at the IBA Technology Conference held in Mumbai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றி பெருமையளிக்கிறது: டேரில் மிட்செல்

திருமணமான சில வாரங்களில் பெண் சடலமாக மீட்பு: காரணம்?

லட்சுமி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

25-வது நாள்! சிறைக்கு இது நடந்திருக்கலாம்!

ஒரே நாளில் நிறைவடைந்த இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள்!

SCROLL FOR NEXT