Silver Price Hike Center-Center-Hyderabad
வணிகம்

கிலோ ரூ.3 லட்சத்தைக் கடந்த வெள்ளி!

கிரீன்லாந்து மீதான வர்த்தக பதற்றங்கள் அதிகரித்ததாலும், டாலரின் மதிப்பு பலவீனமடைந்ததாலும், பாதுகாப்பான முதலீட்டாக வெள்ளிக்கான தேவை அதிகரித்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: கிரீன்லாந்து மீதான வர்த்தக பதற்றங்கள், டாலரின் மதிப்பு பலவீனமடைந்ததாலும், பாதுகாப்பான முதலீட்டாக வெள்ளிக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக, ஃபியூச்சர் வர்த்தகத்தில் வெள்ளியின் விலை முதல் முறையாக கிலோவுக்கு ரூ.3 லட்சத்தை கடந்து பயணித்தது வருகிறது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், வெள்ளி-க்கான ஃபியூச்சர் ஒப்பந்தத்தின் விலை ரூ.16,438 உயர்ந்து, கிலோ ஒன்றுக்கு ரூ.3,04,200 என்ற புதிய சாதனைை படைத்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில், வெள்ளியின் ஃபியூச்சர் ஒப்பந்த விலை கிட்டத்தட்ட ரூ.35,037 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 31, 2025 அன்று வெள்ளி கிலோவுக்கு ரூ.2,35,701 ஆக பதிவான விலையிலிருந்து, தற்போது 29% அதாவது ரூ.68,499 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

பிப்ரவரி மாத ஃபியூச்சர் ஒப்பந்தத்திற்கான தங்கத்தின் விலை ரூ.2,983 உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.1,45,500 ஆக உள்ளது. அதுவே கடந்த வாரத்தில், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கத்தின் விலை ரூ.3,698 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் சந்தையில், வெள்ளி மற்றும் தங்கம் முறையே கிலோ ஒன்றுக்கு ரூ.3,00,000 மற்றும் 10 கிராமுக்கு ரூ.1,45,000 என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

கிரீன்லாந்து விவகாரம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா வரிகளை அறிவித்தது விலை உயர்வுக்கு மேலும் ஆதரவளித்துள்ளது.

வெள்ளியின் விலை 170 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதாகவும், தங்கம் 70 சதவீதத்திற்கும் மேலாக லாபம் ஈட்டியுள்ளது. சர்வதேச சந்தையில், மார்ச் மாத ஃபியூச்சர் ஒப்பந்தங்கள், அவுன்ஸுக்கு 5.81 டாலர் உயர்ந்து 94.35 டாலர் என்ற புதிய சாதனையை எட்டியது.

பிப்ரவரி மாதம் தங்கத்துக்கான ஃபியூச்சர் ஒப்பந்தத்தில் அதன் விலை அவுன்ஸுக்கு ஒன்றுக்கு 102.6 டாலர் உயர்ந்து 4,698 டாலர் என்ற புதிய உச்சத்துக்கு சென்றது.

இந்த ஆண்டு இதுவரை, வெளிநாட்டில் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு 33.6% வருமானத்தை அளித்துள்ளது. கடந்த வருடம் இறுதியில் வெள்ளி அவுன்ஸுக்கு ஒன்றுக்கு 70.60 டாலராக இருந்த நிலையில், தற்போது 94.35 டாலராக உயர்ந்துள்ளது.

Silver prices soared to breach the Rs 3 lakh-per kg-mark for the first time in futures trade on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போட்டிகளில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன: முதல்வா் மு.க.ஸ்டாலின்

என்ஜின் அழுத்த பிரச்னை: தாமதமாக புறப்பட்ட மைசூா் விரைவு ரயில்

ஜன. 23-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தீப்பந்தம் ஏந்தி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

SCROLL FOR NEXT