FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: தங்கம், வெள்ளி விலை உயர்வு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Updated On : 1 மார்ச் 2026, 10:36 am IST
தங்கம் விலை உயர்வு
பகிர்:

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை நடத்தி வருவதால், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை இந்த வாரம் முதல் 3 நாள்களில் (பிப். 23,24,25) மொத்தம் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்தது. தொடர்ந்து பிப்.25-இல் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,19,360-க்கும் பிப்.26-இல் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.15,200-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,21,600-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

பின்னர், மாலை மீண்டும் கிராமுக்கு ரூ. 350 உயர்ந்து ரூ.15,550-க்கும், சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,24,400-க்கும் விற்பனையானது.

இதனிடையே, ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,26,200-க்கும் கிராமுக்கு ரூ. 225 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,775-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்மூலம் 2 நாள்களில் தங்கம் விலை ரூ.7,000 உயர்ந்துள்ளது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 325-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 உயர்ந்து ரூ.3.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

Gold and silver prices have risen as joint US-Israeli forces are carrying out a surprise attack on Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments