தேசிய பங்குச்சந்தை ANI
வணிகம்

3 நாள்களுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் ஏற்றம்!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,459.66 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை வர்த்தகத்தில் குறைந்த புள்ளிகள் வித்தியாசத்திலேயே நேர்மறையில் வர்த்தகமானது.

எனினும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 397.73 புள்ளிகள் உயர்ந்து 82,307.37 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 132.40 புள்ளிகள் உயர்ந்து 25,289.90 புள்ளிகளில் நிறைவடைந்தது.

கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமானது. சென்செக்ஸ் 82,000 புள்ளிகளுக்குக் கீழ் சென்ற நிலையில் இன்று சற்று ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் பங்குகளில் அதானி போர்ட்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், எஸ்பிஐ, டாடா ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய பங்குகளில் அடங்கும். மாறாக, எடர்னல், டைட்டன், மாருதி சுசுகி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவைச் சந்தித்தன.

துறைவாரியாக, நிஃப்டி ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வோர் பொருள்கள் துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளும் லாபத்தில் முடிவடைந்தன. நிஃப்டி பொதுத்துறை வங்கி மற்றும் மீடியா துறைகள் தலா 2 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து அதிக லாபம் ஈட்டின.

நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 1.34 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.76 சதவீதமும் லாபம் ஈட்டியது.

நேட்டோவில் கிரீன்லாந்தை இணைப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியதால் ஐரோப்பிய நாடுகள் மீது வரிவிதிப்பு இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து உலகளவில் பங்குச்சந்தை வர்த்தகம் முன்னேற்றம் கண்டுள்ளது.

Stock Market closing update: Sensex rises 398 pts; Nifty at 25,290

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போர் முடிவுக்கு புதினுடன் சந்திப்பு: டிரம்ப் அறிவிப்பு

மூடப்படாத ரயில்வே கேட்! லாரி மீது ரயில் மோதி விபத்து! நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் தவிர்ப்பு!

சிறை முதல் ரெட்ட தலை வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

"உதயநிதி மீது FIR போடணும்! திமுக ஆளும் கட்சியா? எதிர்க்கட்சியா?": அண்ணாமலை பேட்டி | BJP | DMK

2025 - 2026 ஜனவரியில் தங்கம், வெள்ளி விலை இவ்வளவு உயர்வா? போட்டியில் சிக்கனும் முட்டையும்கூட..

SCROLL FOR NEXT