பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம். 
வணிகம்

தொடரும் கரடிகளின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 770 புள்ளிகளுடன், நிஃப்டி 241 புள்ளிகளுடன் நிறைவு!

சென்செக்ஸ் 769.67 புள்ளிகள் சரிந்து 81,537.70 ஆகவும், நிஃப்டி 241.25 புள்ளிகள் சரிந்து 25,048.65 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: நேற்றைய வர்த்தகத்தின் வலுவான மீட்சியை தக்கவைக்க தவறிய பங்குச் சந்தை, இன்றைய வர்த்தக அமர்வில் அனைத்து துறைகளிலும் விற்பனை அழுத்தம் தொடர்ந்ததால் வெகுவாக சரிந்தன.

மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, முதல் பாதியில் பங்குச் சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வர்த்தகமானது. இருப்பினும், மத்திய வேளையில் ஏற்பட்ட லாபப் பதிவு, நிஃப்டி-யை இன்றைய குறைந்தபட்ச அளவான 25,025.30 புள்ளிகள் வரை இழுத்து சென்றது.

வர்த்தக முடிவில், ​​சென்செக்ஸ் 769.67 புள்ளிகள் சரிந்து 81,537.70 ஆகவும், நிஃப்டி 241.25 புள்ளிகள் சரிந்து 25,048.65 ஆக நிலைபெற்றது.

பங்குச் சந்தை வர்த்தக முடிவில், முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடுமையாக சரிந்தன. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.5% சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 2% மேல் சரிந்தன. இந்த வாரத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 2.5% வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ், எடர்னல், இண்டிகோ, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசுகி இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, டிரென்ட், லார்சன் & டூப்ரோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிந்தன.

மறுபுறம் டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், ஆசிய பெயிண்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், எடர்னல், இன்டர்குளோப் ஏவியேஷன், சிப்லா ஆகிய பங்குகள் சரிந்த நிலையில் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டெக் மஹிந்திரா, ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ, எச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

இன்றும் இந்திய ரூபாய் அழுத்தத்தில் இருந்ததால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.91.97 என்ற புதிய குறைந்த சாதனை அளவை எட்டியது.

பங்கு சார்ந்த நடவடிக்கைகளில், மகாராஷ்டிர அரசு உடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிறகு பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் பங்குகள் 4% சரிந்தன. லாபம் 51% சரிந்த போதிலும் பந்தன் வங்கி பங்குகள் 4% உயர்ந்தன. லாபம் 10% அதிகரித்ததைத் தொடர்ந்து டான்லா பிளாட்ஃபார்ம்ஸ் பங்கின் விலை 7% உயர்ந்தன.

3வது காலாண்டு வருவாய் சிறந்து இருந்தபோதிலும் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பங்குகள் 5% சரிந்தன. 3வது காலாண்டு லாபம் 44% உயர்ந்ததையடுத்து, ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்ஸ் கம்பெனி இந்தியா பங்குகள் 6% அதிகரித்தன. ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் 5% உயர்ந்து புதிய 52 வார உச்சத்தை எட்டியது.

அதானி எண்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், சின்ஜீன் இன்டர்நேஷனல், ரிலையன்ஸ் பவர், லோதா டெவலப்பர்ஸ், தேஜாஸ் நெட்வொர்க்ஸ், பிரீமியர் எனர்ஜிஸ், நெட்வொர்க் 18, கோத்ரெஜ் பிராபர்டீஸ், ஜஸ்ட் டயல், பிரமல் பார்மா, தேவயானி இன்டர்நேஷனல், சபையர் ஃபுட்ஸ், ப்ளூ ஜெட், எச்எஃப்சிஎல், ஆஃப்கான்ஸ் இன்ஃப்ரா, பிரிகேட் எண்டர்பிரைசஸ், ஹனிவெல் ஆட்டோமேஷன், டிஎல்எஃப், ஸ்டெர்லிங் வில்சன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வார குறைந்த விலையை எட்டியது.

நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க பங்குகள் உயர்ந்து முடிவடைந்த நிலையில், ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்ந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 1.03% உயர்ந்து 64.72 அமெரிக்க டாலராக உள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 (திங்கள்கிழமை) பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியை மக்கள் வெறுத்துவிட்டனர்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் BJP - NDA ஆட்சி அமையும்! - NDA பொதுக் கூட்டத்தில் மோடி பேச்சு | Modi speech

அதானி குழுமப் பங்குகள் 13% சரிவு!

குடியரசு நாள் தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!

2-வது டி20: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT