புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 3வது காலாண்டில் ரூ.18,645 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
எரிவாயு உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஏற்பட்ட பலவீனம் ஆகியவற்றால் இந்த மெத்தனம் என்றது நிறுவனம்.
பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்கு 1.13% சரிந்து ரூ.1,385.95 ஆகவும் என்எஸ்இ-யில் 1.17% சரிந்து ரூ.1,386.10ஆக நிலைபெற்றது.
சென்செக்ஸில் அதிக சந்தை மதிப்புள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தித்ததால், பங்குச் சந்தை சரிவடைய இது முக்கிய காரணமாக அமைந்தது.
நாட்டின் மிகப்பெரிய குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜிஎஸ்டி வரி விகித சீரமைப்பு, நுகர்வோர் தயாரிப்பு மற்றும் வணிகம் உள்ளிட்டவை பிரித்து விடப்பட்டதால் சில்லறை வர்த்தகத்தில் மந்தமான வளர்ச்சியைக் கண்டதாக தெரிவித்தது.
நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.18,645 கோடியாக இருந்த நிலையில், கடந்த வருடம் இது ரூ.18,540 கோடியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.