பெங்களூரைச் சேர்ந்த யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம், 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான ரூ.335 கோடியுடன் ஒப்பிடுகையில், இது 25% அதிகரித்து ரூ.418 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான ரூ.7,732 கோடியிலிருந்து கிட்டத்தட்ட 3% அதிகரித்து ரூ.7,942 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
நிறுவனத்தின் நிகர விற்பனை மதிப்பு, பானங்கள் மற்றும் விளையாட்டுப் பிரிவு மூலம் கிடைத்த வருவாய், 3வது காலாண்டில் ரூ.3,694 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ.3,433 கோடியை விட இது 7.6% அதிகமாகும்.
இருப்பினும், 2வது காலாண்டில், நிகர லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 10% குறைந்து ரூ.464 கோடியாக இருந்தது. இதுவே 2வது காலாண்டில் ரூ.7,199 கோடியாக இருந்த மொத்த வருவாய், காலாண்டுக்குக் காலாண்டு அடிப்படையில் 10% அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.