மும்பை: அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று வர்ணிக்கப்படும் இந்தியா-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சந்தை உணர்வு சற்றே மேம்பட்டதையடுத்து உலோகம், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகள் உயர்ந்தன.
இன்றைய வர்த்தக அமர்வில், சந்தை மந்தமான நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில், நாளின் பெரும்பகுதிக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வர்த்தகமானது. பிற்பகுதியில் பங்குகளில் ஏற்பட்ட வாங்குதல் காரணமாக நிஃப்டி நாளின் உச்சத்திற்கு சென்றது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 319.78 புள்ளிகள் உயர்ந்து 81,857.48 புள்ளிகளாகவும், நிஃப்டி 126.75 புள்ளிகள் உயர்ந்து 25,175.40 புள்ளிகளாகவும் நிலைபெற்றது. அதே வேளையில், நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% உயர்ந்தன.
சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் மஹிந்திரா & மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், எடர்னல் மற்றும் ஐடிசி ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் அதானி எண்டர்பிரைசஸ், ஆக்சிஸ் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், அதானி போர்ட்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவை உயர்ந்த நிலையில் மறுபுறம் எம்&எம், கோடக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் எடர்னல் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.
வாகனம், எஃப்.எம்.சி.ஜி, ஊடகம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தவிர, மற்ற அனைத்துத் குறியீடுகளும் உயர்ந்தன. இதில் உலோகத் துறை பங்குகள் 3% உயர்ந்தன.
பங்குச் சார்ந்த நடவடிக்கையில், 3வது காலாண்டு முடிவுகள் இலக்கை அடைய தவரியதால் கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 2% சரிந்தன. 3வது காலாண்டு வருவாய் அதிகரித்த நிலையில் ஆக்ஸிஸ் வங்கியின் பங்குகள் 5% உயர்ந்தன. 3வது காலாண்டு லாபம் 5% சரிந்ததால், கோத்ரெஜ் நுகர்வோர் தயாரிப்புகளின் பங்குகள் 5% சரிந்தன.
வெள்ளி விலை எல்லா நேரத்திலும் இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையில் ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது. 3வது காலாண்டு லாபம் 150% அதிகரித்த போதிலும் ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி பங்குகள் 7% சரிந்தன. ரூ.27.04 கோடி மதிப்புள்ள ஆர்டரின் அடிப்படையில், ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்குகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்தன.
மரைன் எலக்ட்ரிக்கல்ஸ் ரூ.284 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை வென்றதால் அதன் பங்குகள் 7% உயர்ந்தன. பலவீனமான காலாண்டு 3 முடிவுகளால் அர்பன் கம்பெனி பங்குகள் 2% க்கும் அதிகமாக சரிந்தன.
சின்ஜீன் இன்டர்நேஷனல், சிக்னேச்சர் குளோபல், பிரைன்பீஸ் சொல்யூஷன், ரிலையன்ஸ் பவர், பாலி மெடிக்கர், மகாநகர் கேஸ், பிசிபிஎல் கெமிக்கல், தேவ்யானி இன்டர்நேஷனல், ஜீ என்டர்டெயின்மென்ட், டிக்சன் டெக்னாலஜிஸ், சபையர் ஃபுட்ஸ், பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், இன்டீஜீன், செரா சானிட்டரி, ஆதித்யா பிர்லா லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ், தேஜாஸ் நெட்வொர்க்ஸ், நியூஜென் சாஃப்ட்வேர், ஒலெக்ட்ரா கிரீன்டெக், கோத்ரெஜ் பிராபர்ட்டீஸ் உள்ளிட்ட 640க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வாரம் குறைந்த விலையை எட்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.