முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.91.79ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தக தொடக்கத்தில் உயர்ந்து பிறகு, வர்த்தக முடிவில் 11 காசுகள் சரிந்து ரூ.91.79ஆக நிலைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2026 at 1:19 PM
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தக தொடக்கத்தில் உயர்ந்து பிறகு, வர்த்தக முடிவில் 11 காசுகள் சரிந்து ரூ.91.79ஆக நிலைபெற்றது.

அமெரிக்க டாலர் குறியீடு பலவீனமடைந்ததாலும், ஐரோப்பாவுடனான எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக முன்னேற்றம் ஒருவித நம்பிக்கையை அளித்ததாலும், ரூபாய் உயர்ந்து தொடங்கியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் விற்பனை அழுத்தம் மற்றும் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்டவையால் ரூபாய் மதிப்பு சற்று பாதிப்புக்குள்ளானது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.91.60 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, ஆரம்பத்தில் ரூ.91.50 என்ற உச்சத்தைத் தொட்டது. பிறகு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய நாளின் குறைந்தபட்சமான ரூ.91.83 என்ற நிலையைத் தொட்டு, முந்தைய நாள் முடிவடைந்த நிலையிலிருந்து 11 காசுகள் சரிந்து ரூ.91.79ஆக நிலைபெற்றது.

நேற்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு அதன் எல்லா கால குறைந்தபட்ச நிலையிலிருந்து மீண்டு, டாலருக்கு நிகாரன 22 காசுகள் உயர்ந்து ரூ.91.68 என்ற அளவில் முடிவடைந்தன.

summary

The rupee pared initial gains and settled for the day in the negative territory, down 11 paise at 91.79 against the US dollar.

முழு கட்டுரையைப் படிக்க →