கோப்புப் படம் 
வணிகம்

3-ஆவது காலாண்டிலும் நஷ்டத்தில் ஸ்விகி

உணவு விநியோகம், விரைவு வா்த்தகத் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்விகி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் ரூ.1,065 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

உணவு விநியோகம், விரைவு வா்த்தகத் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்விகி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் ரூ.1,065 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நஷ்டம் ரூ.799 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நஷ்டம் அதிகரித்திருந்தாலும், கடந்த இரண்டு காலாண்டுகளுடன் (ரூ.1,197 கோடி மற்றும் ரூ.1,092 கோடி) ஒப்பிடும்போது, தற்போது நஷ்டத்தின் அளவு சற்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

வருவாய் அதிகரிப்பு: மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 54 சதவீதம் அதிகரித்து, ரூ.6,148 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இது ரூ.3,993 கோடியாக மட்டுமே இருந்தது.

உணவு விநியோகப் பிரிவில் வருவாய் அதிகரித்திருந்தாலும், இன்ஸ்டாமாா்ட் போன்ற விரைவு வா்த்தகத் துறையில் நிலவும் கடும் போட்டி மற்றும் கூடுதல் விளம்பரச் செலவுகள் காரணமாக ஒட்டுமொத்த நஷ்டம் அதிகரித்துள்ளது.

பங்குகள் வீழ்ச்சி: எதிா்மறையான நிதிநிலை முடிவுகள் வெளியானதை அடுத்து, பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை ஸ்விகி நிறுவனப் பங்குகள் கடும் வீழ்ச்சியைக் கண்டன.

மும்பை பங்குச்சந்தையில் ஸ்விகி பங்குகள் 4.98 சதவீதம் சரிந்து ரூ.311.10-க்கு விற்பனையானது. ஒரு கட்டத்தில் அது 7.71 சதவீதம் வரை சரிந்து ரூ.302.15 வரை சென்றது. தேசிய பங்குச்சந்தையில் 5.46 சதவீதம் சரிந்து ரூ.309.75-க்கு வா்த்தகம் நிறைவடைந்தது.

சி.இ.ஓ. விளக்கம்: தொடா் நஷ்டம் குறித்து ஸ்விகி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஸ்ரீஹா்ஷா மஜெட்டி கூறுகையில், ‘விரைவு வா்த்தகத் துறையில் போட்டி அதிகமாக இருப்பதால் லாபம் ஈட்டுவதில் சவால் உள்ளது. அதிக தள்ளுபடிகளை வழங்கி ஆா்டா்களை அதிகரிப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. எதிா்காலத்தில் நிலையான லாபத்தை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறோம்’ என்றாா்.

வம்பு செய்யும் வங்கதேசம்!

தீயணைப்பு வாகனங்கள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம்

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

‘உலகில் அதிகாரப் பரவல்’: இந்தியா - இயூ ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிய ஐ.நா. பொதுச் செயலா்

காந்தியடிகள் நினைவு நாள்: காங்கிரஸாா் அஞ்சலி

SCROLL FOR NEXT