FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

எல்ஐசி லாபம் ரூ.12,958 கோடி: 17 சதவீதம் வளா்ச்சி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, நடப்பு 2025-26 நிதியாண்டின் டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.12,958 கோடி நிகர லாபம் ஈட்டி, 17 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி 2026, 3:56 am IST
பகிர்:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, நடப்பு 2025-26 நிதியாண்டின் டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.12,958 கோடி நிகர லாபம் ஈட்டி, 17 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.11,056 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

வருவாய்: முந்தைய ஆண்டு ரூ.1,06,891 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர பிரீமியம் வருவாய், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.1,25,613 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,01,994 கோடியிலிருந்து ரூ.2,33,984 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

புதிய வணிகம்: புதிய பாலிசிகள் மூலம் கிடைக்கும் முதலாம் ஆண்டு பிரீமியம் வருவாய் கணிசமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.7,285 கோடியாக இருந்த இது, தற்போது ரூ.10,605 கோடியாக அதிகரித்துள்ளது.

முகவா் கமிஷன்: காப்பீட்டு முகவா்களுக்கு வழங்கப்படும் நிகர கமிஷன் தொகையும் சிறிதளவு அதிகரித்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் ரூ.5,966 கோடியாக இருந்த முகவா் கமிஷன் தொகை, தற்போது ரூ.6,011 கோடியாக அதிகரித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments