பிப்ரவரி மாதம் ராயல் என்ஃபீல்ட் விற்பனை 11% அதிகரிப்பு!
ராயல் என்ஃபீல்ட், பிப்ரவரி மாதம் அதன் மொத்த விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரித்து 1,00,905 வாகனங்களாக இருப்பதாக இன்று தெரிவித்துள்ளது.
புதுதில்லி: மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட், பிப்ரவரி மாதத்தில், மொத்த விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரித்து 1,00,905 வாகனங்களாக இருப்பதாக இன்று தெரிவித்துள்ளது.
நிறுவனம் பிப்ரவரி 2025ல் 90,670 வாகனங்களை விற்பனை செய்ததாக தெரிவித்தது. இதுவே, கடந்த மாதம் உள்நாட்டு விற்பனை 13% அதிகரித்து 91,248 வாகனங்களாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 80,799 வாகனங்களாக இருந்தது.
ஏற்றுமதிகள் கடந்த ஆண்டு, இதே காலத்தில் 9,871 வாகனங்களாக இருந்த நிலையில், தற்போது 2 சதவீதம் குறைந்து 9,657 வாகனங்களாக உள்ளது.
பிப்ரவரி மாதம் விற்பனையின் வேகம் தொடர்வதாக நிறுவனம் தெரிவித்தது. இது உலகளாவிய சமூகத்தில் நீடித்த தேவையை பிரதிபலிப்பதாக ராயல் என்ஃபீல்ட் தலைமை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் தெரிவித்தார்.
இதற்கிடையில், செய்யாறு உற்பத்தி நிலையத்தில் அடுத்த 18 மாதங்களில் பிரவுன்ஃபீல்ட் நிலையத்தில் விரிவாக்கம் மூலம் அடையக்கூடிய திறனை நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதன் மூலம் எங்கள் ஆண்டு உற்பத்தி திறன் தற்போதுள்ள 14.6 லட்சம் வாகனத்திலிருந்து 20 லட்சம் வாகனங்களாக உயரும் என்றார்.