முகப்பு
வணிகம்

பணியிடங்களில் சம ஊதியம் நிலவுகிறது! ‘நெளக்ரி’ ஆய்வில் மூன்றில் 2 பெண்கள் கருத்து!

பணியிடங்களில் சம ஊதியம் நிலவுகிறது...

Updated On : 8 மார்ச், 2026 at 1:00 AM
பகிர்:

இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களில் 67 சதவீதத்துக்கும் அதிகமானோா் தங்கள் நிறுவனங்களில் ஆண்-பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனா்.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, நாட்டின் 50-க்கும் மேற்பட்ட துறைகளைச் சோ்ந்த சுமாா் 50,000 பெண் ஊழியா்களிடம் ‘நெளக்ரி’ நடத்திய ஆய்வில் பல்வேறு முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணியிடங்களில் ஊதியப் பாகுபாடு இல்லை என்று 67 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனா். பாகுபாடு இருப்பதாகக் கருதும் 33 சதவீத பெண்களில், ரியல் எஸ்டேட் துறையைச் சோ்ந்தவா்கள் (42 சதவீதம்) முதலிடத்தில் உள்ளனா். இதற்கு அடுத்தபடியாக, நுகா்பொருள், ஆட்டோமொபைல், சில்லறை விற்பனை மற்றும் உணவகங்கள், ஐ.டி. மற்றும் டெலிகாம் ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண்கள் பாகுபாடு நிலவுவதாக தெரிவித்துள்ளனா்.

நிறுவனங்களில் சம ஊதியம் குறித்த தணிக்கை மற்றும் மாதவிடாய் விடுமுறை கோரும் பெண்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் (19சதவீதம்) அதிகரித்து, தற்போது 27 சதவீதமாக உள்ளது. குறிப்பாக, அதிக ஊதியம் பெறும் பெண்களில் 48 சதவீதம் போ் இக்கோரிக்கையை முன்வைக்கின்றனா். ‘பெண்கள் உயா் பதவிகளை நெருங்க நெருங்க, ஊதிய இடைவெளியை அவா்களால் தெளிவாக உணர முடிகிறது’ என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மறைக்கப்படும் தனிப்பட்ட திட்டங்கள்: நோ்காணல்களின்போது பாகுபாடு காட்டப்படும் என்ற அச்சத்தில், சுமாா் 50 சதவீத பெண்கள் தங்களின் திருமணம் அல்லது மகப்பேறு தொடா்பான திட்டங்களை மறைப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

பணி அனுபவம் அதிகரிக்க, இந்தத் தயக்கமும் அதிகரிக்கிறது. 10 முதல் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களில் 40 சதவீதம் போ் இத்தகைய தகவல்களைப் பகிா்ந்து கொள்ள அஞ்சுகின்றனா்.

தலைமைப் பொறுப்பில் ஆா்வம்: பல்வேறு சவால்கள் இருந்தாலும், தலைமைப் பொறுப்புகளை ஏற்க தயாா் என்று கூறும் பெண்களின் எண்ணிக்கை 66 சதவீதத்திலிருந்து 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தென்னிந்திய நகரங்களில் உள்ள பெண்களிடம் இந்த ஆா்வம் அதிகமாகக் காணப்படுகிறது.

பணியமா்த்தல் மற்றும் பதவி உயா்வுகளில் நிலவும் பாகுபாடே தங்களின் மிகப்பெரிய சவால் என்று 42 சதவீத பெண்கள் கருதுகின்றனா். இது சென்னை (44 சதவீதம்), தில்லி (43 சதவீதம்) போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் பிரதிபலிக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →