FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சரிவுக்குப் பிறகு உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி! ஆட்டோ, வங்கி, உலோகம் பங்குகள் உயர்வு!

சென்செக்ஸ் 938.93 புள்ளிகள் உயர்ந்து 75,502.85 புள்ளிகளாகவும், நிஃப்டி 257.70 புள்ளிகள் உயர்ந்து 23,408.80 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம்
பகிர்:

மும்பை: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலியாக கடந்த மூன்று வர்த்தக நாட்களில் இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவுக்குப் பிறகு, வாரத்தின் முதல் நாளான இன்று (மார்ச் 16) பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை 1 சதவீதத்திற்கும் மேலாக மீண்டன. குறிப்பாக, வாகனத் துறை, வங்கி மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஏற்றத்தால் நிஃப்டி 50 குறியீடு 23,400 புள்ளிகளுக்கு மேல் சென்று நிலைபெற்றது.

30 பங்குகளைக் கொண்ட, மும்பை பங்குச் சந்தையான, சென்செக்ஸ் குறியீடூ 938.93 புள்ளிகள் உயர்ந்து 75,502.85 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி குறியீடு 257.70 புள்ளிகள் உயர்ந்து 23,408.80 புள்ளிகளாக நிலைபெற்றது. சென்செக்ஸ் அதிகபட்சமாக 75,805.27 புள்ளிகளையும் பிறகு குறைந்தபட்சமாக 73,949.76 புள்ளிகளையும் எட்டியது.

சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமெண்ட் பங்கு விலை 4.22 சதவீதம் உயர்ந்த நிலையில் டிரெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, எடர்னல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, டாடா ஸ்டீல் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, பவர் கிரிட் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகள் சரிந்தன.

Advertisement

Advertisement

வாகனம், வங்கி மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பங்குகளை அதிக அளவில் முதலீட்டாளர்கள் வாங்கியதன் காரணமாக, வர்த்தக முடிவில் வலுவான மீட்சியைப் பதிவு செய்தது இந்திய பங்குச் சந்தை.

நிஃப்டி-யில் மஹிந்திரா & மஹிந்திரா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், டிரென்ட், அல்ட்ராடெக் சிமென்ட், எச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், விப்ரோ, மேக்ஸ் ஹெல்த்கேர், சன் பார்மா, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

துறை ரீதியாக, ஆட்டோ, வங்கி, எஃப்எம்சிஜி, உலோகம் 0.3 முதல் 1% வரை உயர்ந்தன. மாறாக மீடியா, எண்ணெய் & எரிவாயு, மருந்து, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பங்குகள் 0.5 முதல் 2.7% வரை சரிந்தன.

ஆசிய சந்தைகளில், ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிந்தன. தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங் ஹேங் செங் குறியீடு உயர்ந்தன. ஐரோப்பிய பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தன. அமெரிக்க பங்குச் சந்தை (வெள்ளிக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

தரவுகள் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ.10,716.64 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.9,977.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

குஜராத் கேஸ், தீபக் நைட்ரைட், பெர்ஜர் பெயிண்ட்ஸ், திரிவேணி டர்பைன், மகாநகர் கேஸ், டாடா கெமிக்கல்ஸ், சம்பல் ஃபெர்டிலைசர்ஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், சிஇ இன்ஃபோ சிஸ்டம்ஸ், ஜேகே லட்சுமி சிமென்ட், பாட்டா இந்தியா, ரிலாக்ஸோ ஃபுட்வேர், குஜராத் ஸ்டேட் பெட்ரோ, ட்ரைடென்ட், இர்கான் இன்டர்நேஷனல், ஐடிசி ஹோட்டல்ஸ் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வாரக் குறைந்த நிலையை அடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.41 சதவீதம் உயர்ந்து 104.4 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Stock market benchmark indices Sensex and Nifty rebounded by over 1 per cent on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments