முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 86 காசுகள் சரிந்து ரூ. 94.82 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 86 காசுகள் சரிந்து ரூ. 94.82 என்ற மற்றொரு புதிய வரலாற்றுச் சரிவில் வர்த்தகம் நிறைவு.

Updated On : 27 மார்ச், 2026 at 10:55 AM
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: மேற்கு ஆசிய மோதல் குறித்த நிச்சயமற்ற சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவடைந்து வரும் டாலர் உள்ளிட்டவையால், இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 86 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான ரூ. 94.82 என்ற மற்றொரு புதிய வரலாற்றுச் சரிவில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு மற்றும் அந்நிய நிறுவன முதலீடுகளின் தொடர் வெளியேற்றம் ஆகியவை, இந்திய ரூபாயின் மீதான அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.18 என்ற நிலையில் தொடங்கி பிறகு, முதல் முறையாக ரூ. 94.50 என்ற எல்லையை கடந்து, ரூபாய் மதிப்பு இறுதியில் டாலருக்கு நிகரான ரூ. 94.82 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இது முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 86 காசுகள் குறைவாகும்.

முன்னதாக, நேற்று (புதன்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பு 20 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகராக ரூ. 93.96 என்ற புதிய வரலாற்றுச் சரிவில் இருந்தது.

summary

The rupee tanked 86 paise to close at yet another all-time low of 94.82 against the US dollar on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.