ஃபுஜியாமா பவர் சிஸ்டம்ஸ் 4வது காலாண்டு நிகர லாபம் இரட்டிப்பு!
ஃபுஜியாமா பவர் சிஸ்டம்ஸ், அதன் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்து ரூ. 106.3 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
புதுதில்லி: ஃபுஜியாமா பவர் சிஸ்டம்ஸ், மார்ச் முடிய வரையான காலாண்டில் அதன் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்து ரூ. 106.3 கோடியாக இருப்பதாக அறிவித்தது.
மார்ச் 2025 அன்று முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 51.2 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. இந்தக் காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ. 900.8 கோடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 480.3 கோடியாக இருந்தது.
2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு ஈட்டிய ரூ. 156.3 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 304.1 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
இதேபோல், நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் கடந்த ஆண்டு ரூ. 1,540.7 கோடியிலிருந்து அதிகரித்து ரூ. 2,654.5 கோடியாக உள்ளது என்றது.
Fujiyama Power Systems on Friday said its net profit has more than doubled to Rs 106.3 crore in the March quarter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.