பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
பேயர் கிராப்சயின்ஸ் நிகர லாபம் 13 சதவீதம் உயர்ந்து ரூ. 162.1 கோடியாக இருப்பதாக நிறுவனம் இன்று அறிவித்தது.
புதுதில்லி: வருவாய் அதிகரிப்பின் காரணமாக, மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 13 சதவீதம் உயர்ந்து ரூ. 162.1 கோடியாக இருப்பதாக பேயர் கிராப்சயின்ஸ் இன்று அறிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 143.3 கோடியாக இருந்தது.
2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 1,147.4 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, இது ரூ. 1,083.5 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு இருந்த ரூ. 568 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 689.2 கோடியை எட்டியது.
கடந்த ஆண்டு நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 5,770 கோடியாக அதிகரித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இது ரூ. 5,593.1 கோடியாக இருந்தது.
Bayer CropScience Ltd reported a 13 per cent increase in net profit to Rs 162.1 crore for the March quarter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.