தொடர் சரிவில் இந்திய ரூபாய்: 1 டாலர் - ரூ. 96.35! 54 காசுகள் சரிவு!
இந்திய ரூபாய் மேலும் வலுவிழந்து, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகாரன ரூ. 96.35 என்ற வரலாற்றுச் சரிவில் நிறைவுபெற்றது.
மும்பை: தொடர்ந்து நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் காரணமாக உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலரின் வலுவான நிலையால், இந்திய ரூபாய் மேலும் வலுவிழந்து, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகாரன ரூ. 96.35 என்ற வரலாற்றுச் சரிவில் வர்த்தகம் நிறைவுபெற்றது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புகைந்து கொண்டிருக்கும் பதற்றங்கள் காரணமாக, உலகளாவிய சந்தை தொடர்ந்து மந்தமான நிலையிலேயே நீடித்து வருவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் ரூ. 96.19 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு டாலருக்கு நிகராக மேலும் சரிந்து ரூ. 96.39 என்ற நிலையை எட்டியது. இது அதன் முந்தைய வர்த்தக நிறைவு விலையிலிருந்து 58 காசுகள் சரிவு. வர்த்தக முடிவில், ரூபாய் 96.35 என்ற நிலையில் நிலைபெற்று, அதன் முந்தைய நிறைவு விலையிலிருந்து 54 காசுகள் சரிவாகும்.
Advertisement
கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகரான ரூ. 96 என்ற நிலைக்குக் கீழே சரிந்தது, பிறகு ரூ. 95.81 என்ற வரலாற்றுச் சரிவில் வர்த்தகம் நிறைவடைந்தது.