ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தத்தில் சாதனை உச்சம் தொட்ட கச்சா எண்ணெய்!
ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தத்தில் பேரல் ஒன்றுக்கு ரூ.10,044 என்ற சாதனை உச்சத்தைத் எட்டியது.
புதுதில்லி: நீடித்து வரும் மேற்கு ஆசிய நெருக்கடியால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில், இன்று கச்சா எண்ணெய் விலை அதிகரித்தன. வர்த்தகத்தின் போது ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தத்தில் பேரல் ஒன்றுக்கு ரூ.10,044 என்ற சாதனை உச்சத்தைத் எட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஜூன் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் விலை 0.43 சதவீதம் உயர்ந்து, பேரல் ஒன்றுக்கு ரூ.9,967 ஆக வர்த்தகமானது. அதே வேளையில், இந்த ஒப்பந்தமானது பேரல் ஒன்றுக்கு ரூ.9,924 என்ற நிலையில் முடிவுபெற்றது.
புதிய கொள்முதல் உள்ளிட்டவையால், ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தத்தில் கச்சா எண்ணெய் விலை, வணிகர்கள் உயர்வாக வைத்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
உலகளவில், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 0.01 சதவீதம் உயர்ந்து பேரல் ஒன்றுக்கு 108.67 டாலர் ஆகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் 1.45 சதவீதம் உயர்ந்து ஒரு பேரலுக்கு 110.48 டாலர் ஆகவும் வர்த்தகமானது.