பங்குச் சந்தை மீட்சி: வங்கி பங்குகள் உயர்வு!!
சென்செகஸ் 231.99 புள்ளிகள் உயர்ந்து 75,415.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 64.60 புள்ளிகள் உயர்ந்து 23,719.30 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மும்பை: முதலீட்டாளர்கள் முன்னணி வங்கி பங்குகளை தொடர்ந்து வாங்கியதும் மற்றும் உலகளாவிய சந்தைகளின் ஏற்றம் ஆகியவற்றால், பங்குச் சந்தையின் குறியீடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் நிறைவடைந்தன.
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் சந்தையின் உயர்வுக்கு வித்திட்டது.
30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் குறியீடு, இன்றைய காலை நேர வர்த்தகத்தில் 627.61 புள்ளிகள் உயர்ந்து 75,810.97 புள்ளிகளாக இருந்தது. பிறகான வர்த்தகத்தில் சென்செகஸ் 231.99 புள்ளிகள் உயர்ந்து, 75,415.35 புள்ளிகளாக இருந்தது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி குறியீடு 64.60 புள்ளிகள் உயர்ந்து 23,719.30 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் ட்ரென்ட், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்ந்தும் மறுபுறம் சன் பார்மா, ஐடிசி, பவர் கிரிட் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.
குறைந்த விலைகளில் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றங்கள் தணியக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் கூடிய உலகளாவிய சாதகமான குறிப்பு ஆகியவற்றால், உள்நாட்டுச் சந்தைகள் மிதமான போக்கில் வர்த்தகமானது.
உலக அளவில், செயற்கை நுண்ணறிவு, சார்ந்த முதலீட்டுப் போக்கு முதன்மையான உந்துசக்தியாகத் திகழ்ந்தது. அதே வேளையில், உள்நாட்டுச் சந்தையில் நிதித்துறை சார்ந்த பங்குகள் உயர்ந்து முன்னின்று வழிநடத்தியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஆசியச் சந்தைகளில், தென் கொரியாவின் அளவுகோல் குறியீடான கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகிய குறியீடுகள் வர்த்தக முடிவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
ஐரோப்பியச் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்கச் சந்தை நேற்று (வியாழக்கிழமைய) ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 1,891.21 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய கச்சா எண்ணெய், 2.3 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 104.7 அமெரிக்க டாலர் என்ற நிலையில் உள்ளது.
Stock market benchmark indices ended higher on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.