முகப்பு
வணிகம்

ஒடிஸா: ஜே.எஸ்.டபிள்யூ. எஃகு உருக்காலை கட்டுமானம் ரூ.65,000 கோடியில் தொடக்கம்

Updated On : 28 மே 2026, 3:54 am IST
பகிர்:

ஒடிஸாவில் ரூ.65,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.32 கோடி டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய எஃகு உருக்காலை அமைக்கும் பணிகளை ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது.

ஒடிஸாவின் பராதீப் கடலோர பகுதியில் சுமாா் 2,950 ஏக்கா் பரப்பளவில் இந்த எஃகு உருக்காலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக பல்வேறு கட்டங்களில் சுமாா் ரூ.65,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதன் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 1.32 கோடி டன்னாக திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் தொடக்க விழாவில், ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி, மாநில அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ. குழும அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement